பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியேதேர்தலா?
on October 12, 2017 2:31 pm / 1 comment
பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியேதேர்தலா?
ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம்…
அடுத்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்துக்கும், தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்” என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ. பி. ராவத், நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், இதற்கான கொள்கை முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும், உரிய சட்டத்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டும் வழங்க 40 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவை என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவை வந்து சேர்ந்துவிட்டால், முழுமையாக தேர்தலுக்குத் தயாராகி விடுவோம் என்று ராவத் கூறினார்.கடந்தாண்டு செய்தியாளர்களை பிரதமர் சந்தித்த போது, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த முயற்சி எடுக்கப்படும் என்று கூறி இருந்தது நினைவு கூறத்தக்கது.
“இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதால், தேர்தல் செலவினத்தில் பல ஆயிரம் கோடிகளை மிச்சப்படுத்த முடியும்“ என்று, மத்திய அரசுக்கு, கடிதம் மூலமும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “ இதில் நடைமுறைச் சிக்கல்கள் மிகுந்து இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பிரசாரம், மற்றும் கட்சி ரீதியான பணிகளிலும் சிக்கல்கள் ஏற்படும்” எனக்கூறி, தேர்தல் ஆணையத்தின் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன…!!!.
This post has been viewed 197 times
சமீபத்தில்
-
“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”
/
-
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது
/
-
ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி
/
-
தமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”
/
-
நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்
/
Like us on Facebook
நேயர் கருத்துக்கள்
- MARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ…
- JEGADEESAN. T: குட் யோசனை …
- தமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…
1 Comment
இந்திய தலைமைதேர்தல் ஆணையரின் முடிவு சரியானதுதான்