இரட்டை இலை சின்னம் யாருக்கு? இறுதி விசாரணை தொடங்கியது

 

இரட்டை இலை சின்னம் யாருக்கு?
இறுதி விசாரணை தொடங்கியது

முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது மீதான இறுதி விசாரணையை, இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டனர்.

216df419360055.562d911c0095f copy

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக உடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அம்மா அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியாகவும் பிரிந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தப் பிறகு, தாங்கள்தான் “உண்மையான அ.தி.மு.க., எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்” என்றும் கோரி, சென்னையில் இருந்து டெல்லிக்கு மினி லாரியில் ஏற்றிச் சென்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அதேபோல், தினகரன் அணியினரும் “நாங்களே அ.தி.மு.க.”என்றுக் கூறி, ஏராளமான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

இவர்களுக்கு இடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தமக்கே இரட்டை இலைச் சின்னம் தர வேண்டும் எனக் கோரி ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மூன்று அணியினரும் சமீபத்தில் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து அக். 6–ம் தேதி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஓரணி ஆகிவிட்ட, இ.பி.எஸ்,– ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகினர்.

இந்த நிலையில் 6–ம் தேதி தீபா, தான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த தஸ்தாவேஜூக்கலை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதன்படி, எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், தினகரன் அணியினரும் மட்டுமே இப்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் கமிஷனின் விசாரணை, முடிந்த பின் இன்னும் சில தினங்களில், “இரட்டை சிலை சின்னம் யாருக்கு?” என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

இதற்கிடையில், இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணைக்கு தடை விதிக்க கோரி, தினகரன் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “நவம்பர் 10–ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதில் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்” என்று அறிவித்தனர். இதற்கிடையில், இரட்டை இலை யாருக்கு? என்பதற்கான விசாரணையை, தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது. அடுத்த கட்ட விசாரணையை, அக்டோபர்.13–ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது.

இந்த நிலையில், “இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைத்தாலும் உபயோகம் இல்லை” என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், கொலை, கொள்ளைகள் தினந்தோறும் நிகழ்ந்து, சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், இதற்கு செய்தித் தாள்களே சாட்சி எனவும் குறிப்பிட்டார். மேலும் அமைச்சர்கள் தங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தால் அ.தி.மு.க. வின் எந்த அணிக்கும் பயன் ஏற்படப் போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்…!!!.

 
 
 
 

This post has been viewed 358 times