பாஜக தலைவர் அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?

 

பாஜக தலைவர் அமித்ஷா மகன் மீதான
குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி
அமைதியாக இருப்பது ஏன்?

பாஜக தலைவர் அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

jay-modi-amit-shah-bjp-

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், காம்லா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வியாபாரத்தில் மிகச் சிறந்தவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். பாஜக தலைவர், அமித் ஷாவின் மகன், ஜெய் அமித்ஷாவின் நிறுவனத்தின் மதிப்பு, 50 ஆயிரத்திலிருந்து 80 கோடியாக உயர்ந்துள்ளது என கூறினார்.

2014–ம் ஆண்டில் அடையாளமே இல்லாமல் இருந்த ஒரு நிறுவனம், 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதை போன்று வேறு யாரும் செய்ய முடியவில்லையே எனக் கூறினார். தானும் ஊழல் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்’ எனக் கூறிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்காமல், மவுனமாக இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், சிறிய, நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்தார்.

மேலும், “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதே மத்திய அரசின் லட்சியம்” என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், “பிரதமர் மோடி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில், நடைமுறை சிக்கல்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக தீர்வு காணுமாறு ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கடின உழைப்பில் சேகரிக்கும் பணத்தின் மதிப்பை மத்திய அரசு நன்கு அறியும் என்றும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே மத்திய அரசின் கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான அமேதியின் ஜக்திஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய போது, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பிரச்சனையே முக்கியமானது, அவற்றை சரி செய்ய முடியவில்லை எனில் பிரதமர் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களின் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, முன்னர் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்றும் ராகுல் கூறினார்…!!!.

 
 
 
 

This post has been viewed 127 times