தமிழக புதிய ஆளுனர் பதவி ஏற்றார்

 

தமிழக புதிய ஆளுனர் பதவி ஏற்றார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய ஆளுனருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

governor-tn-eps

தமிழக ஆளுநராக பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் பல்வேறு பிரச்சினைகள் தினம் தோறும் உருவாயின. இதன் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அக்.6 -ம் தேதி காலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல. கணேசன் எம்.பி. மற்றும் திரளான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், “வித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன்” என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது மரபு முறை மீறப்பட்டதாகவும், தன்னை காக்க வைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தமிழக போலீசாருக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, 5–ம் தேதி சென்னைக்கு விமானத்தில் வந்த புதிய ஆளுனருக்கு, மீனம் பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுனராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு, மேள, தாளங்கள் முழங்க வழியனுப்பு விழாவும் நடைபெற்றது.

ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்தவர், வித்யாசாகர் ராவ் என்பதும், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை, ஔவையார் சிலைகளை திறந்து வைத்ததும், வித்யாசாகர் ராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது…!!!.

 
 
 
 

This post has been viewed 120 times