ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்குவதா? தீபா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு

 

ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்குவதா? தீபா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்தோட்டத்தில் உள்ள “வேதா இல்லம்” நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

poes8_08-12-2008_15_49_58

 

அதில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதாநிலையம் இல்லம் உள்ளிட்ட பல சொத்துக்களை தங்களது பாட்டி சந்தியா வாங்கியதாக தெரிவித்துள்ளார். அத்தை ஜெயலலிதா எந்த உயிலும் எழுதி வைக்காமல் மறைந்து விட்டதால், அந்த சொத்துக்களுக்கு தானும், சகோதரர் தீபக்கும் தான் சட்டப்பூர்வ வாரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரனைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 23- தேதிக்கு தள்ளிவைத்தார்..!!!.

 
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 

This post has been viewed 105 times