துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

“லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்”- தெலுங்கானா முதல்வர் சொல்கிறார்

“லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்” என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.

489

 

நிகழ்ச்சில் ஒன்றில் அவர் பேசிய போது, நிலக்கரி நிறுவனத்தில் பெருமளவில் ஊழல் நடப்பதாக அவரிடம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் முறையிட்டனர். இதனையடுத்து தொழிலாளர்களிடையே பேசிய கே.சந்திரசேகர ராவ், யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், எந்த அதிகாரியாவது லஞ்சம் கேட்டால், அவரை செருப்பால் அடியுங்கள் எனவும் கூறினார். லஞ்சம் கொடுப்பவர்களையும் செருப்பால் அடியுங்கள் என முதலமைச்சர் பேசியது அதிகாரிகளிடையே சர்ச்சையை உருவாக்கி உள்ளது.!!!..

ஆஸ்திரேலியாவில், அதானி நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கடந்த ஜூன் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றபோது, அங்குள்ள குயின்ஸ் லேன்ட் மாநிலத்தில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3264
இந்த நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் சாட்டிய சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள், இதற்கு எதிராக குழு அமைத்தனர். இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதானி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.!!!.

தினகரன் தரப்பினரின் வழக்கு தள்ளுபடி

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி, எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், தினகரன் தரப்பினரும் தேர்தல் கமிஷனிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

din_3143774f

இதனையடுத்து கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையை நடத்திய நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர், தினகரன்தரப்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்..!!!.

எல்லையில், சீன ராணுவ வீர்ர்களுக்கு
“வணக்கம் “ தெரிவித்த நிர்மலா சீத்தாராமன்

இந்திய- சீன எல்லையில் உள்ள நாதுலா பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்றார். இந்திய வீரர்களுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.

NIRMALAKB1

 

பின்னர் அவர், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை நோக்கி கையசைத்தார். அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். பின்னர் சீன ராணுவ அதிகாரிகளுடன் உரையாடிய நிர்மலா சீதாராமன், அங்கிருந்த வீரர்களிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தொடர்ந்து அவர்களுக்கு தனது இரு கைகளை கூப்பி வணக்கம் கூறினார். தான் கூறிய வணக்கத்திற்கான அர்த்தம் மற்றும் விளக்கம் குறித்து சீன வீரர்களிடம் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.!!!..

“சீனா, பாகிஸ்தான் ஒரே நேரத்தில் தாக்கினாலும்
போரை எதிர்கொள்ள தயார்”– இந்திய விமானப்படை தளபதி உறுதி

இந்திய விமானப்படையின் 85 வது ஆண்டு விழா, டெல்லியில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தலைமையில் நடைபெற்றது. விமானப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.தனோவா, சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் தாக்கினாலும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

air-force-day-chief-dhanoa-pti_650x400_51507464587

 

“சர்ஜிக்கல் “தாக்குதல் மூலம் எல்லையை தாண்டும் தீவிரவாதிகளை தாக்கும் துல்லியமான தொழில்நுட்பம் இந்திய விமானப்படையில் உள்ளது என்றும் அவர் கூறினார். சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற தனோவா, 2032–ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படை அதிநவீனமயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.!!!.

பாரதீய ஜனதா மீது பினராயி விஜயன் கடும் தாக்கு

“பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஈர பட்டாசுகள்.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

629257-pinarayi-vijayan-kerala-cm

கேரளாவில், பா.ஜ.க, மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, 15 நாட்களுக்கு பேரணி நடத்தப்படும் என்றும் இதில் பா.ஜ.க, மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் கீசேரியில் நடந்த பேரணியில், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கேரள முதலவர் பினராய் விஜயன், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஈர பட்டாசுகள் என்றும், கேரள மாநிலத்தின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பா.ஜ.க.வின் அச்சுறுத்தலுக்கு கேரள மக்கள் என்றுமே அஞ்சமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். !!!.

 
 
 
 

This post has been viewed 130 times