600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண்

 

600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண்

600 ஆண்களுடன் செல்பி எடுத்து ஒரு பெண் சாதனை படைத்துள்ளார். இதை ஒரு சோதனையாக அவர் செய்து பார்த்துள்ளார்.

1507290095-292

நெதர்லாந்தின் ஆம்ஸ்டிராமை சேர்ந்த 20 வயதுப்பெண் நோயா ஜான்ஸ்மா. இவர் ஒரு வித்தியாசமான சோதனை செய்துள்ளார். இவர், 600 ஆண்களுடன் செல்பி எடுத்து, அவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார். அதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதை ஒரு சேவையாக அவர் செய்துள்ளார்.

இவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45, 000 பேர் பின் தொடர்கிறார்கள். இந்த பக்கத்திற்கு அவர் ‘ டியர் கேட் காலர்ஸ் (dear catcallers) என்று பெயர் வைத்துள்ளார்.!!!.

இச்சிறிய பாத்திரத்தின் விலை
என்ன தெரியுமா?

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை 37.7 மில்லியன் டாலர்களுக்கு விலைபோயுள்ளது.

chinese-bowl-sothebys-3
இது, சாங் மன்னர் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி. 960 -1127 -ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டது.

இந்த கோப்பை, ஹாங்காங்கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது , பலர் தொலை பேசி மூலமும் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் 20 நிமிட நேரம் நீண்டது. இறுதியில் இது, 37.7 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இதை வாங்கியவர் யார்? என்ற விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது.

இதற்கு முன்பு கடந்த 2014 -ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை, அதிகபட்சமாக 36.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. தற்போது அந்த சாதனையை இக்கோப்பை முறியடித்துள்ளது.!!!.

ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு

இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூ டிரைவர் மூலம் ஒருவர் கிழித்து விட்டார். கர்டா ஏரிக்கரையின் அருகில் உள்ள சலோ அருங்காட்சியகத்தில், ஹிட்லர் வரைந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

_95105311_adolfhitler

நாஜி படைத் தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஸ்கார்ப்பி என்பவர், இந்த ஓவியத்தை கிழித்து விட்டார். அருங்காட்சியகத்தின் தலைவரான புரூனோ குவேர், அந்த ஆயில் ஓவியத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை நேரில் பார்த்துள்ளார்.

அந்த ஓவியம், சரிசெய்யப்பட்டு மீண்டும் கண்காட்சியில் வைக்கப்பட்டது. புகைப்படத்தின் உரிமையாளர், தாக்குதல் நடத்தியவர் மீது எந்தப் புகாரும் அளிக்கப்போவது இல்லை என முடிவு செய்துள்ளார். “கொரியாரே டெல்லா சேரா” என்னும் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.!!!.

ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ரா பெர்ரி!

அதிகபட்ச மக்கள் வெள்ளை ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்திருக்கவோ, சுவைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஜப்பானில் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கிறது, “ஒயிட் ஜுவல்” என்று அழைக்கப்படும் வெள்ளை ஸ்ட்ராபெர்ரி.

1_20

இது மிகவும் அரிய வகை. மிகக் குறைவாகவே விளைவிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு யாசுஹிட்டோ டெஷிமா என்ற பண்ணையாளர், ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரியைத் தன்னுடைய தோட்டத்தில் விளைவித்தார். இந்தப் பழத்துக்கு இணையாக இன்னொரு ஸ்ட்ராபெர்ரி உலகில் இல்லை என்கிறார்கள்.

நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து, இதை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பழத்தின் உட்புறமும், வெளிப்புறமும் வெள்ளையாக இருக்கும். சாதாரண சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட உருவத்தில் இவை பெரியதாக உள்ளது. இது பற்றி யாசுஹிட்டோ டெஷிமா கூறுகையில்,“நிழலிலேயே இவற்றை விளைவிக்கிறேன்.

கொஞ்சம் சூரிய வெளிச்சம் பட்டாலும், அவை சிவப்பு நிறமாக மாறிவிடும். முதிர்ந்த பிறகு இவை நிறம் மாறுவதில்லை. ஒயிட் ஜுவல் ஒன்றின் விலை 650 ரூபாய். பழத்தின் மணத்திலேயே இனிப்புச் சுவை தெரியும். தோல் மெல்லியதாக இருக்கும். முதல் கடியில் அன்னாசிப் பழம் போன்று தோன்றும். ஆனால் சில நொடிகளில் புதிய சுவை கிடைத்துவிடும். இன்னொரு பழம் சுவைக்கத் தோன்றும்” என்று கூறியுள்ளார்.!!!.

 
 
 
 

This post has been viewed 134 times