சினிமா செய்திகள்

 

தன்னுடைய ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசிய விஜய்

தீபாவளியை வேறு லெவலில் கொண்டாட விஜய் ரசிகர்கள் பக்கா பிளான் போட்டு வருகின்றனர். மெர்சல் படம் வருமா? வராதா? என்ற பயத்தை போக்கி படத்தை பிரம்மாண்டமாக வரவேற்க தயாராகி விட்டனர்.

b7404a_a614ec0182d631c94ea29f374b64a53b

இந்த நிலையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், “என்ன ஒரு ஸ்பெஷலான தினம், விஜய்யை சந்தித்த நாள். ரசிகர்கள் தான் என்னுடைய பலம். அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், அன்பிற்காகவும்தான் நான் வியர்வை சிந்தி உழைக்கிறேன்” என்று விஜய் கூறியதாக பதிவு செய்துள்ளார்.

பாகுபலி உட்பட அனைத்து சாதனைகளையும்
ஒரே நாளில் முறியடித்த பத்மாவதி ட்ரைலர்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உட்பட பல்வேறு பிரபலங்கள் பத்மாவதி படத்தின் பிரமாண்டம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.

ranveer-singhs-look-from-padmavati-movie-201709-1507006492-300x450

மிக வைரலான இந்த ட்ரைலரை யு-டியூபில் ஒரே நாளில் 15 மில்லியன் (1.5 கோடி) பேர் பார்த்துள்ளனர்.

பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் எனவும், படம் நவம்பர் 1–ம் தேதி திரைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எத்தனை தியேட்டர்களில்
வெளியாகிறது மெர்சல்?

தளபதி விஜய்யின் “மெர்சல்” படம் பல தடைகளை தாண்டி வரும் 18–ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக வெளியாகவுள்ளது.

vijay-mersal-759
இந்நிலையில் மெர்சல் மொத்தம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வரை மொத்தம் 3,292 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது என தேனாண்டாள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நான் அந்த படத்தை பார்க்கப்
போவதில்லை…! நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா, சமீபத்தில் தரமணியில் அவர் தந்த நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு தற்போது “அவள்” படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் “அரண்மனை “படத்தில் பேயாக நடித்திருந்தார்.

Andrea Jeremiah cross legs stills (2)

தற்போது சித்தார்த்துடன் “அவள்” என்னும் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த்துக்கு நீண்ட நாளாக திகில் கலந்து கதை எடுக்க வேண்டும் என்ற விருப்பமாம். இதன் இயக்குனர் மிலிந்த் அவருக்கு நண்பராம்.

ஆண்ட்ரியா இது பற்றி கூறிய போது,”எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. வித்தியாசமான கதைகள் என்னை தேடி வருகிறது. இது என்னை இன்னும் பலப்படுத்துகிறது. இந்த படத்தை நான் பார்க்கபோவதில்லை. எனக்கு இந்த மாதிரியான ஹாரர் படங்களை பார்க்க பயமாக இருப்பது தான் காரணம்” என கூறினார்.

அறையை பூட்டி தீயிட்டு கொளுத்திய
தாடி பாலாஜி – கதறிய மகள் – வைரலாகும் வீடியோ

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

NTLRG_20170701164150751425

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போர்ஷிகாவை ரூமில் அடைத்து வெளியே தீவைவைத்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதிலும் அவர் உணர்ச்சி வசத்துடன் தகாத வார்த்தைகளால் நித்யாவிடம் பேசுவது போல உள்ளது. குழந்தை முன்பு தவறாக நடந்து கொண்டாதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் நித்யா முதுகில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். அதோடு முதல் மனைவி தீபாவின் மீது இப்படி சந்தேகப்பட்டு தான் பிரிந்து போனதாக சொல்லப்பட்டது.

என்ன நினைத்து சினிமாவுக்கு வந்தேன் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன், மிக குறைந்த காலத்தில் சினிமாவில் உயரம் தொட்டவர். ஒரு சில படங்களிலேயே வெற்றிகான இடத்தை நோக்கி முன்னேறி விட்டார். தற்போது அவருக்கென ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது.

e5ee0e99515ec40101893ff978af52e4

இவர் ஒரு கல்லூரி விழாவில் மேடையில் பேசினார். அதில், “சினிமாவில் ஹீரோவாக வருவேன் என்று நினைக்கவில்லை.

அஜித், விஜய் போன்றோருக்கு பிரண்டாக நடித்தால் போதும் என தான் நினைத்தேன். ஆனால் ஹீரோ வாய்ப்பை வழங்கியது தனுஷ், இயக்குனர் பாண்டி ராஜ் தான். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்” என கூறினார்.

 
 
 
 

This post has been viewed 262 times