வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* நான் ஒரு கிராமப்பெண். எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாக, எனது மாமனார் வீட்டில், எனது கணவரின் அக்கா, தங்கை போன்றவர்களுடன் வாழ்கிறேன். எனது கணவர், சென்னையில் வேலையில் இருக்கிறார். 2 வாரத்துக்கு ஒரு முறைதான் என்னை பார்க்க வருகிறார். நான் மனம் திறந்து கூட பேச முடிய வில்லை. என் மீது என் கணவர் வீட்டார், என் கணவரிடம் அவர் வரும் போதெல்லாம் புகார் கூறி, எங்களுக்குள் சண்டை ஏற்படுத்தி விடுகிறார்கள். நான் என் தாய் வீட்டுக்கே முழுமையாக சென்று விடலாமா? என்று யோசிக்கிறேன். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

* உங்கள் கணவருடன் நீங்கள் உண்மையான அன்பினால் பிணைக்கப்படும் போது, இத்தகைய பிரச்சினைகளில் இருந்து மீளலாம். பொறுமையை கையாளுங்கள். உங்கள் கணவர் வரும் போது, அவரிடம் உங்கள் வேதனைகள் எதையும் காட்டிக்கொள்ள வேண்டாம். சிரித்த முகத்துடனேயே உங்கள் கணவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில், உங்களை உங்கள் கணவர் புரிந்து கொள்வார்.!!!.

* நான் பி.இ. படித்த பெண். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. திருமண நிச்சயத்தின்போதே, மாப்பிள்ளை வீட்டார் பல சீர்வரிசைகளை விதித்துள்ளனர். அவற்றை எங்களால் செய்ய முடியாது. எனக்கு திருமணத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது… நீங்கள்தான் தைரியம் சொல்ல வேண்டும்.

* நிறைவேற்ற முடியாத பல சீர்வரிசைகளை மாப்பிள்ளை வீட்டார் கூறுவார்களே என்றால், திருமணத்துக்கு முன்பு உங்கள் வருங்கால கணவரிடம் தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளுங்கள்.!!!.

* எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. காரணம்,நான் என் இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் எனது பெற்றோரை இழந்து விட்டேன். மற்ற குடும்பங்களில் உள்ள வாலிபர்கள், தங்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் போது, எனக்கு மட்டும் ஏன் என் தலையில் ஆண்டவன் இப்படி எழுதி விட்டான் ? என்று நினைத்து வேதனைப்படுகிறேன். இதைத்தொடர்ந்து கோபம் வருகிறது. நான் கோபப்படாமல் இருக்க வழி என்ன?

* சிறந்த மன நல மருத்துவரை சந்தித்து, தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.!!!.

* நான் அரசாங்க உயர்பணியில் இருக்கிறேன். எனவே எனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. இதனால் சில ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நினைத்து இரவு தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறேன். இதற்கு நிவாரணம்தான் என்ன?

* இனிமையாக பேசிப்பழகி வந்தால், மனது லேசாகி விடும். மனம் அமைதியும் பெறும். ஆனால் நீங்கள் உங்கள் கடமையில் இருந்து தவறி விடவும் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.!!!.

 
 
 
 

This post has been viewed 221 times