மாணவர்களின் பிரச்சினைகள்…!!!

 

மாணவர்களின் பிரச்சினைகள்…!!!

இந்த வார வாலிப முத்து பகுதியில், “மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் சில கருத்துக்களை நாம் பார்க்க இருக்கிறோம். முற்காலத்தில் “குரு குலம்”தான் மாணவர்கள் கல்வி கற்கும் இடமாக இருந்தது.

Law---Brian-Flanagan-Lecture-1120---Maynooth-University

அந்த காலத்தில் குருவானவரிடம் இருந்து கல்விகளையும், வித்தைகளையும் கற்க, அவருக்கு அடி பணிந்து, அவருக்கு பணிவிடைகள் செய்துதான் மாணாக்கர்கள் எழுத்தறிவையும், வில் வித்தைகள் போன்ற போர் முறைகளையும், அரசாட்சிக்கு தேவையான ஞானத்தையும் பெற்றார்கள். ஆனால் நம் நாடு மன்னராட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறிய பின், மாணவர்களின் கல்விக்கு பாடசாலைகள் உருவாகின. அந்த பாடசாலைகளை உருவாக்கி கல்வியை, ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு வந்தவர், காமராஜர்தான். அவர் போட்ட “கல்வி வித்து” இன்று தமிழகத்தில் கல்வித்துறை மிகப்பெரிய ஆலமரமாக விழுது விட்டு விளங்குகிறது.

ஆனாலும், இப்போதும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சிளைகளை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில், மாணவர்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகள், அவர்களுடைய கல்வியை பாதித்து விடுகிறது. சில நேரங்களில் வேறு பல பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன.

மாணவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆசிரியரும், பள்ளி, மற்றும் கல்லூரிகளை நடத்துவோரும், பெற்றோர்களும் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனை ஆரம்ப கட்டத்திலே இனங்கண்டு கொள்ள வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பிரச்சினை உருவாகக் கூடிய சந்தர்ப்பங்களை கண்டும் காணாதவர் போல் இருப்பதால், பிரச்சினை முற்றிவிடுகின்றது.

ஒழுங்காக பாடசாலைக்கு வருகை தந்து பாடங்களில் சிறந்த புள்ளிகளை எடுக்கும் ஒரு மாணவன், முன்னறிவிப்பு எதுவுமின்றி அடிக்கடி பாடசாலைக்கு வராமல் விடுதல், ஏனைய மாணவர்களை விட்டு ஒதுக்கி சோர்வுடன் தனித்திருத்தல், தேவையற்ற வினாக்களை ஆசிரியரிடம் கேட்டு வகுப்பறை கற்றல் நடவடிக்கைகளை குழப்புதல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், இது குறித்து ஆராய வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.

மாணவர்களின் கல்வியையும், ஆளுமையையும் சீர்குலைக்கும் நடத்தைகள் ஆசிரியரின் கவனத்துக்கு எடுக்க வேண்டிய பிரச்சினைகளாகும். அடிக்கடி ஒரே வகையான பிரச்சினைகள் ஏற்படும் போது, உடனடியாக வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் மாணவர்களுக்கு ஏற்படுவதற்கு காரணம் அவர்களின் உடல், மற்றும் உளவியல் ரீதியாக அவர்களின் தேவைகள் குழந்தைப் பருவத்தில் திருப்திகரமாக நிறைவேற்றப்படாமையும் ஒரு காரணம் ஆகும்.

ஆசிரியர்கள் கல்வியில் தாழ் மட்ட த்திலுள்ள மாணவர்களை இனங்கண்டு அதற்கான காரணங்கள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை ஆராயாமல், பொதுப்படையாக அவர்கள் கல்வியில் பின்தங்கியோரென முடிவெடுப்பது, தவறாகும். சில மாணவர்கள், கணிதம், மொழி ஆகிய குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் குறைவாக இருப்பர். இதற்கு காரணம், மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தராமை, பரீட்சை நாட்களில் வராது விடல், பரீட்சையில் பார்த்து எழுதுதல், வகுப்பறைக்கு தாமதித்து வருதல், ஒப்படைகளை கால எல்லைக்குள் சமர்ப்பிக்காமை, வறுமை ஆகிய பிரச்சினைகள் பொதுவாக காணப்படலாம்.

தாழ் மட்ட அடைவுக்கு வேறு பல காரணங் களும் காணப்படுகின்றன. குறைந்த நுண்மதி, உடற் குறைபாடுகள், நோய், போஷாக்கின்மை, குடும்பச் சூழல் போன்றவைகளும், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் விஷயங்கள் என்பதையும் மறந்து விட முடியாது.

ஆசிரியரின் நடத்தை, பாட ஏற்பாடு, கற்பித்தல் முறை ஆகியன பொருத்தமற்று காணப்படின் பிரச்சினைகள் ஏற்படலாம். சில நேரங்களில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி, இனம் வாரியான பிரச்சினைகளும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு விடுகிறது. இது விரும்பத் தகாத ஒன்று.

வெவ்வேறு இனம், சமயம், மொழி, சமூகப் பண்பாடு ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களுக்கு மத்தியிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சினைகள் உருவானால், கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு விடியல் காண வேண்டும்.

இதன் மூலம் மாணவர் சமூக வாழ்க்கைக்கு பொருத்தமான பண்புகளை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் உயருவதுடன், நல்லதொரு குடிமகன்களாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த சமூகம் முன்னேறும்., நாடும் முன்னேறும் வாலிபனே…!!!.

 
 
 
 

This post has been viewed 176 times