மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

ராஜபாளையம் நாய்…

தமிழகத்தில் இருக்கும் நாட்டு நாய் வகைகளில் ராஜ பாளையம் நாய், பார்க்க அழகாகவும், வீட்டுக்காவலுக்கு சிறப்பானதாகவும் இருக்கும். இந்த வகை நாய்கள், வேட்டைக்கு மிகவும் சிறந்தவை.

9373096_orig

வெள்ளை நிறமாகவும், இளம் சிவப்பில் மூக்கும் மடிந்த காதுகளும் கொண்டதாக இது இருக்கும். ஆக்ரோஷ தன்மை வாய்ந்தது. ராஜபாளையம் வகை நாய்கள், வெளிநாட்டு இனமான “ கிரேடன்” இனம் போல இருக்கும். இந்திய அரசின் தபால் தலையில் இடம் பெற்ற ஒரே நாய் இனம் “ ராஜபாளையம் நாய்”தான் என்பது குறிப்பிடத்தக்கது.!!!.

கீரைகளின் அரசி

“கீரைகளின் அரசி” என அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரை, பல்வேறு சத்துக்களை கொண்டதாகும். இந்த கீரை, ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், கண் பார்வையை தெளிவு படுத்துகிறது.

1462166305-9466

 

உடல் பருமன் குறைய விரும்புவோர், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணி கீரையை, தேங்காய் எண்ணையில் போட்டு நன்றாக காய்த்த பின், அந்த எண்ணையை தலைக்கு தேய்த்தால், நன்றாக முடி வளரும்.!!!.

சிறு நீரக கற்களை அகற்றும் இளநீர்

சிறு நீரக கற்களை அகற்றும் சக்தி, இளநீருக்கு உள்ளது. தினமும் ஒரு இளநீர் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் கரைந்து போகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

06-1436177468-2-tender-coconut-10-600-17-1487340583

சிறுநீர் பெருக்கியாகவும் இளநீர் விளங்குகிறது. இளநீர், ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைவாக உள்ளோருக்கு, இளநீர் சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது.!!!.

புற்று நோயை தடுக்கும் பூசணி

நாம் சாதாரணமாக சமையலில் பயன் படுத்தும் வெள்ளரி மற்றும் பூசணிக்காயில், புற்று நோயை தடுக்கும் தன்மை இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Выращивание-тыквы-в-открытом-грунте-в-Подмосковьеஇவற்றில் பி.ஐ. மற்றும் பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் இருக்கின்றன. இவை புற்று செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 205 times