போலீஸ் கிரைம்

 

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கேட்டு அவமானப்படுத்தியதால் தச்சுத் தொழிலாளி தற்கொலை

சேலம் குப்தா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். தச்சுத் தொழில் செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிதிநிறுவனத்தில், 65 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த தொகைக்கு மாதந்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளார். பாதி தொகை செலுத்திய நிலையில், கடந்த மாதம் செல்வம் தனது மகளுக்கு திருமணம் செய்ததால் பண நெருக்கடி காரணமாக 2 தவணை செலுத்த முடியாமல் போயுள்ளது.

fgeyhtehythth
இந்நிலையில், நிதிநிறுவன உரிமையாளர் ரமேஷ், தவணை பணத்தை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து செல்வத்தின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் வீட்டின் முன் ரமேஷ் தனது ஆதரவாளர்களை அனுப்பி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமான படுத்தியுள்ளார், இதனால் மனமுடைந்த செல்வம் தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.!!!.

ஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த
வாலிபருக்கு வலைவீச்சு

திருவண்ணாமலை அருகே பள்ளி ஆசிரியர் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போளூர் பாலகண்ணையன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், மாற்றுத் திறனாளியான இவர், போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

karthikeyan

இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டத்தின் போது, பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவர் ஆசிரியர் கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அந்த இளைஞர் கார்த்திகேயனின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியரை அருகில் இருந்த சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 105 times