சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( தருண், திருவண்ணாமலை):
தமிழ் நாட்டுக்கு புதிய ஆளுனர் பன்வாரிலால் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளாரே. இனி தமிழக அரசியல் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்குமா?

தீர்வுகள் அனைத்தும் கிண்டி ஆளுனர் மாளிகையில் எடுக்கப்பட்டால் , தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்கும். ஆனால், தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு, டெல்லியில்இருந்து வரவேண்டியதுள்ளதே ! ஆள்தான் மாறி இருக்கிறதே தவிர, வேறு எந்த உத்தரவுகள் வருவதில் மாற்றம் இல்லை. எனவே வழக்கம் போலதான் ஆளுனர் மாளிகை இயங்கும்.!!!.

( தீபி, தஞ்சை):
இந்தியாவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு உண்டா?

ஏற்கனவே இருந்த அரசுகள் அறிவித்த திட்டத்தை, மீண்டும் ஒரு முறை புதிய திட்டமாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு மட்டும் முயற்சிகள் எடுத்தால் போதாது. மாநில அரசுகளும் முழு முயற்சி எடுத்தால், இன்னும் சில ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற வாய்ப்பு உண்டு.!!!.

( ஜேஸ்மின் , நெல்லை):
தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்வராவது எப்போது?

தமிழக சட்டசபை தேர்தலுக்கே இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் தேர்தல் வர வாய்ப்பு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. சட்டசபை தேர்தல் வந்தால்தான், யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழும். எனவே, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.!!!.

( தனசிங், மதுரை):
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்த மத்திய அரசின் நடவடிக்கையால், கறுப்புப் பணம் ஒழிந்து விட்டதா?

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து புதிய நோட்டுகளை அச்சடித்த செலவு ரூ. 32 ஆயிரம் கோடி. ஆனால், அந்த தொகைக்கு கூட கணக்கிலில்லா பணம் வெளி வர வில்லை என்பது சமீபத்தில் வெளிப்பட்ட தகவல்.!!!.

( தாமஸ், சென்னை):
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இருக்கிறது என்று கூறும் அரசால், சென்னை நகரில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க முடிய வில்லையே., ஏன்?

கொலை – கொள்ளை குறைந்தாலும், சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் ஆங்காங்கு நடக்கத்தான் செய்கிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.!!!.

( சுரேஷ் குமார், சென்னை):
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால், மக்களுக்கு நன்மையா? பாதிப்பா?

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் மத்திய அரசுக்கும், கார்பரேட்டுகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பது உண்மை. ஆனால் சாதாரண மக்களுக்கு கூடுதல் செலவு என்பது 100 சதவீத உண்மை.!!!.

( தனுஷ், மதுரை):
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்ற முடியாத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை, தற்போதைய தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் நிறைவேற்ற வில்லையே., ஏன்?

ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர., காட்சிகள் மாற வில்லை.!!!.

( வசந்தி, சென்னை):
இரட்டை இலை சின்னம் யாருக்குமே ஒதுக்கப்பட வில்லை என்றால், அதிமுக-வின் நிலை என்ன ஆகும்?

இப்போதே, எடப்பாடி அணி தனியாகவும், தினகரன் அணி தனியாகவும்தான் இயங்குகிறது. இதில் யாருக்கு இரட்டை இலை என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்தாலும், நீதிமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. என்றாலும், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை கொண்ட அணிக்கு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. யாருக்கும் கிடைக்கவில்லை என்றால், டெபாசிட் கூட கிடைக்குமா? அடுத்த கேள்வி.!!!.

 
 
 
 

This post has been viewed 92 times