முந்திரி கொத்து

 

முந்திரி கொத்து

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு – 2 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பாசி(சிறு) பருப்பு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
தேங்காய்துருவல் – அரை கப்
முந்திரிபருப்பு – கால் கப்
சுக்கு- சிறிதளவு
ஏலக்காய் – 6 (ஏலக்காயை நன்றாக பொடிக்க)
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை போட்டு மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2

 

அதே வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காயை சுக்கு போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து மணம் வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் ஏலக்காயுடன் சிறிது சுக்கு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும்.

3

அதனுடன் முந்திரி பருப்பை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் வறுத்து வைத்திருக்கும் பாசி(சிறு) பருப்பை நன்றாக பொடிக்கவும்.

4

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே அரைத்த மாவில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். அதில் தேங்காய் துருவல், முந்திரி ஏலக்காய் பொடித்தது போட்டு கிளறவும்.

1

கிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும். பின் மேல் மாவிற்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைக்கவும். அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.

8

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து தயார்.
குறிப்பு: பூரணத்தை 24 மணி நேரம் நிழலில் உலர்த்தி பின் பொறித்து எடுத்தால் முந்திரி கொத்து மேலும் சுவையாக இருக்கும்..

 
 
 
 

This post has been viewed 253 times