துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

உரிய அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதாக டி.டி.வி. தினகரன் மீது புகார்……

3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு…..

திருச்சி ஸ்ரீரங்கத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டி.டி.வி. தினகரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்து, நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

dinakaran_big-752x440

அப்போது அவருடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் டி.டி.வி. தினகரன் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தது, அரசு உத்தரவை மீறியதாகவும் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.!!!..

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொல்லப்பட்ட வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு வேலை

2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம்உ.பி. மாநிலம் தாத்ரி நகரம் அருகேயுள்ள கிராமத்தில், மாட்டிறைச்சியை வைத்திருந்ததாக கூறி முகமது இக்லக் என்ற முதியவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

0030

 

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 இளைஞர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இதற்கு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 15 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.!!!.

பெங்களூர் சாலையில் நீராடிய கடல் கன்னி

தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் பெங்களூரில் கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு, சாலைகள் பாதிக்கப்பட்டு, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

bengaluru-potholes-artist-baadal-mermaid-lake-0-mos_101317082146

 

பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், இருசக்கர வாகனங்களிலும், நாலு சக்கர வாகனங்களிலும் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாலைகளை சீரமைக்க கோரி, நடிகை சோனு, நூதன போராட்டம் நடத்தினார். அவர், கடற்கன்னி போல வேடமிட்டு, நீராடுவதை போல பாவனை செய்தார். இந்த நூதன போராட்டத்தை, ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.!!!.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ஆகிறார், ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை விரைவில் ராகுல் காந்தி ஏற்பார் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul-Gandhi

டெல்லியில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுயசரித நூல் வெளியிட்டு விழாவிற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க போகிறார்? என பல ஆண்டுகளாக செய்தியாளர்கள் கேட்பதாகவும், இப்போது, விரைவில் அது நடக்கப் போவதாகவும், தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவை சோனியா காந்தி எடுத்துள்ளார். ராகுல் காந்தியின் தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சியினரிடையே புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..!!!..

“ அரசியல்வாதிகளில் சிறந்தவர், பிரணாப் முகர்ஜி”-
மன்மோகன் சிங் புகழாரம்

“நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பிரதமராக இருந்த நரசிம்மராவின் அழைப்பை ஏற்றே நான் அரசியலுக்கு வந்து நிதி அமைச்சரானேன்” என்று கூறினார்.

மேலும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் தலைசிறந்தவர் பிரணாப் முகர்ஜி என்று கூறிய அவர், 2004–ம் ஆண்டு பிரதமர் பதவி வகித்த போது பிரணாப் முகர்ஜி எனக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார் எனவும் தெரிவித்தார்.!!!.
துணை குடியரசு தலைவர் அரசியல் பேசுவதா?
ஸ்டாலின் கண்டனம்

“ நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை” என்று கூறிவிட்டு ஆளுநர் மாளிகையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல் பேசியது வேதனை அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK_Stalin_Telephone (1)

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜ்பவனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல் சட்டப்படி கவர்னர் நடக்க வேண்டும், என்றும் தமிழகத்திற்கு நிலையான அரசு வேண்டும் என்றும் கூறியிருப்பது, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அவருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பினையும், மரியாதையையும் எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.!!!.

“மேலும் அதே விழாவில், ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது., ஒரு ஆட்சி அமைந்து, சட்டசபையில் மெஜாரிட்டி, நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு 5 வருடம் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி ஆளுநர் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்று வெங்கையா நாயுடு கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!!!.

 
 
 
 

This post has been viewed 137 times