தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் – காத்திருக்கும் 10 வயது சிறுவன்

 

தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் -
காத்திருக்கும் 10 வயது சிறுவன்

இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரை விட்டுத் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால், தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான்.

59e2b6f21cc7f-IBCTAMIL

எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன், தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும், அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால், தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்து கொண்டுள்ளார்.

59e2b6f2440b2-IBCTAMIL

தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார். டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த சிறுவன், “தற்போது எனக்கு 10 வயதாகிறது. எனக்கு தேவையானவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

ஆனால் சிறுவயது என்பதால் இன்னும் 8 வருடத்துக்கு பைக் இருந்தும் என்னால் ஓட்ட முடியாது இனிமேல் எனக்கு தேவையான பணத்தினை நானே சம்பாதித்துக்கொள்வேன். என் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டேன். முழுமையாக வளர்ந்துவிட்ட ஒரு ஆளாகவே என்னை எனது பெற்றோர் பார்க்கின்றனர். தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்’” என கூறியுள்ளான்.!!!.

60 அடி டிராகன் எலும்புக்கூடு: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்

சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பொதுவாக சீன பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

தற்போது சீனாவின் ஜன்கோலகோ நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது, இறக்கைகளுடன் காணப்படுகிறது. இந்த டிராகனானது, பெரிய தலையுடனும் இரண்டு குட்டி கைகளுடனும் நீளமான வாலுடனும் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது? முற்காலத்தில் அவை இந்த கிராமத்தில் வாழ்ந்தனவா? என்பது அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை.!!!.

24 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்

சீனாவில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண்பார்வை பறிபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

201710111101408198_Smartphone-addict-goes-BLIND-in-one-eye-after-24-hour-gaming_SECVPF

நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட குறித்த பெண், தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறிஉள்ளார்.
வார இறுதி நாட்களிலும் விடுமுறையின் போதும் தொடர்ச்சியாக “கேம்” விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார்.
விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் காலை 6 மணிக்கு எழுந்து “கேம்” விளையாட ஆரம்பிக்கும் அந்த பெண், மாலை வரையில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவதாகவும், அவர் குறிப்பிட்டு உள்ளார். பெற்றோர் சாப்பிட அழைத்தாலும், அதனை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடியதாக குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது அந்த பெண்ணின் கண் பார்வையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.!!!.

 
 
 
 

This post has been viewed 4,249 times