அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது

 

அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் “மெர்சல்” படம் வெளிவந்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)

இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகை ரம்யா சமீபத்தில் விஜய்யுடன் தான் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் புதிவு செய்து, “மெர்சல் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும். இந்த சாதனையை எந்த தல படமும் நெருங்க முடியாது” என்று கூறியுள்ளார், இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பலரும் இவருடைய அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டது என்று கூறி வரும் நிலையில், எது உண்மை என்று தெரியவில்லை.

“தயவு செய்து இந்த படத்தை தியேட்டரில் பாருங்கள்” – சிவகார்த்திகேயன் கோரிக்கை

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது “வேலைக்காரன்” படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.

41704871-29bc-4b91-b45b-41be58ac5e73

இந்நிலையில் சமீபத்தில் இவர் அறிமுக இயக்குனர் அருண்பிரபு இயக்கிய “அருவி” படத்தை பார்த்து ரசித்துள்ளார். இப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், மேலும், நல்ல முயற்சிகளை நாம் தான் பாராட்ட வேண்டும், கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பாருங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், “அருவி” படத்தில் நடித்த அதிதி பாலன் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரே படத்தால் சம்பளத்தை கூட்டிய அர்ஜூன் ரெட்டி ஹீரோயின்!

நடிகை ஷாலினி பாண்டே என்றால் யார் என பலருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பாக இளம் ரசிகர்கள் வட்டாரத்தினர் அவரை நன்கு அறிவர். சமீபத்தில் வெளியான “அர்ஜூன் ரெட்டி” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.தெலுங்கில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் இவருக்கு இதுவே முதல் படம். இப்படம் ஹிட்டானதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம்.

Actress-Shalini-Pandey-Latest-Yellow-Saree-Photos1

“அர்ஜூன் ரெட்டி” படம் ஹிட்டானதால் சம்பளத்தை ரூ 25 லட்சத்திற்கு உயர்த்திவிட்டாராம். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் 100 சதவீதம் காதல் படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். 2011-ல் வெளியான 100% லவ் படத்தின் தமன்னா ரோலை தான் அவர் இதில் செய்கிறார்.

“மெர்சல்” முதல் நாள் பிரமாண்ட வசூல்

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம், மெர்சல். இப்படத்தை பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக இந்த படம் தீபாவளியன்று வெளிவந்துள்ளது.

mersal_7292

இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த “தெறி “செம்ம ஹிட் அடித்தது.இந்நிலையில் “மெர்சல் “ப்ரீமியர் அமெரிக்காவில் தொடங்க, இப்படம் 273ரி டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது மெர்சல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரு பேப்பர் தானே வித்தியாசம்!

நடிகை இலியானா, ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவை, காதலித்து வருவதாக பலமுறை புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இருவரும் அது பற்றி ஒருமுறை கூட எப்போதும் வெளிப்படையாக பேசியதில்லை.

Ileana-Dcruz-11

இந்நிலையில் சமீபத்தில் இதுபற்றி பேசியுள்ள இலியானா, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

“திருமணம் செய்துகொள்வதற்கு இப்படி வாழ்வதற்கும் ஒரு பேப்பர் தான் வித்தியாசம்.திருமணம் செய்யாவிட்டாலும் ஆண்ட்ரூவுடன் என்னுடைய கமிட்மென்ட் எப்போதும் மாறாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

 
 
 
 

This post has been viewed 6,453 times