சாத்துக்குடி பழத்தின் மகத்துவங்கள் !!!

 

சாத்துக்குடி பழத்தின் மகத்துவங்கள் !!!

எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய பழங்களுள் ஒன்று சாத்துக்குடி. வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள சாத்துக்குடியில், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்றவையும் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைக்கு சாத்துக்குடி மிகவும் நல்லது.

Health-Benefits-Of-Mosambi-Sweet-Lime

 

சாத்துக்குடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன.

2189-Mosambi-or-Sweet-Lime-benefits

1.சாத்துக்குடியில் புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் இந்த பழத்தில் அதிகம் அடங்கியிருக்கின்றது.வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது.

2.சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடியை அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

3.மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

4.பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

5.நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.!!!.

 

 
 
 
 

This post has been viewed 39 times