தமிழ்நாட்டை குறி வைக்கும் பா.ஜ.க…!!!

 

தமிழ்நாட்டை குறி வைக்கும் பா.ஜ.க…!!!

தற்போது உத்தர பிரதேசம், அசாம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், உத்தர்காண்ட், மராட்டியம், சத்தீஷ்கார், மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம் உள்பட 18 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு நட்பு கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தினையும் குறி வைக்கிறது, பாரதீய ஜனதா.

vvtjridskv-1463759408

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் புகார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தியதை தொடர்ந்து, ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதாக, நிதீஷ் குமார் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்தில் நிதீஷ் குமார், பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் பங்கு மிக மிக அதிகம்.

இப்போது அவரது பார்வை, தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையை ஏன், பாரதீய ஜனதா பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? என்பதுதான் அமித்ஷாவின் கேள்வி. இதற்கான காய் நகர்த்தலில், அமித்ஷா ஈடு பட்டு வருகிறார். அதற்குள் அ.தி.மு.க-வில் தற்போது நிலவி வரும் அணிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா? அப்படி முடிவுக்கு வந்து விட்டால், அது பாரதீய ஜனதாவுக்கு நல்லதா? கெட்டதா? என்பது போன்ற பல கோணங்களில் அமித்ஷா சிந்தித்து வருகிறார். “காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை எங்கள் ஆட்சிதான்” என்று கூறத்தான் இத்தனை முயற்சிகள்.

புதுச்சேரியில், நாராயண சாமியின் காங்கிரஸ் ஆட்சியில், அங்கு பாரதீய ஜனதா கட்சியை, பெரிய அளவில் வளர்க்க முடியாத நிலை நீடிக்கிறது. கேரளாவிலும், கர்நாடகத்திலும் பேரணி நடத்தி விட்டு டெல்லி திரும்பிய அமித்ஷாவின் பார்வை அடுத்து தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்ப்பது, அதே நேரத்தில், அதிமுக-வுடன் முதலில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கொண்டு, அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி காண்பது போன்றவற்றுக்கு பல அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார், அமித்ஷா…!!!.

 
 
 
 

This post has been viewed 190 times