வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* டாக்டர்! எனக்கு இதுதான் முதல் பிரசவம். “ நீ ஆண் குழந்தையை பெற வில்லை என்றால், உன்னிடம் பேச மாட்டேன்” என்று என் கணவர் கூறுகிறார். உங்கள் ஆலோசனை என்ன?

* ஆண் குழந்தை பெற வேண்டும்., பெண் குழந்தை பெற வேண்டும் என்று வற்புறுத்துவது சட்டப்படி குற்றம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எது என்றாலும் , நீங்கள் இருவரும் சேர்ந்து வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு.!!!.

* டாக்டர்! நான் ஒரு வாலிபரை காதலிக்கிறேன். சமீபத்தில் அந்த வாலிபர் எனது தங்கையை பார்த்து விட்டார். அதில் இருந்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகிறார்கள். தட்டிக்கேட்டால், பிரச்சினை வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். உங்கள் ஆலோசனை என்ன?

* அந்த குறிப்பிட்ட வாலிபர் யாரை விரும்புகிறார் என்பதை முதலில் நேரடியாக கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். அதற்கேற்ப முடிவுகளை எடுக்கலாம்.!!!.

* டாக்டர்! எனது கணவர் ஒரு சினிமா பைத்தியமாக இருக்கிறார். தினமும் டெலிவிஷனில் அல்லது தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்புகிறார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. குடும்ப செலவுக்கு கூட அவர் போதிய அளவில் பணம் கொடுப்பது இல்லை. அவரை திருத்த ஆலோசனை கூறுங்கள்.

* சரியான மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.!!!.

* சமீபத்தில் எனக்கு திருமணம் முடிந்தது. நானும் எனது கணவரும், அவரது அப்பா, அம்மா, உறவுகள் என கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். என்னுடன் எனது தங்கையும் தங்கிக்கொண்டு, கல்லூரிக்கு சென்று வருகிறாள். அவளுக்கும் எனது கணவரின் உறவில் வரும் வேலை இல்லாத இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்தால் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன். உங்கள் ஆலோசனை என்ன?

* பெரியவர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள்.!!!.

 
 
 
 

This post has been viewed 227 times