நீ, நீயாகவே இரு…!!!

 

நீ, நீயாகவே இரு…!!!

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், “நீ, நீயாகவே இரு” என்ற தலைப்பில் சில கருத்துக்களை நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால், வாலிபனே…! நீ, நீயாகவே இருக்க வேண்டும். ஏனென்றால், பல இளைஞர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்கள் தங்களிடம் புதைந்து கிடக்கும் தனித்தன்மையை அறியாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், மற்றவர்களின் தனித்தன்மையை, அதாவது மற்றவர்களின் நடை, உடை, பாவனைகளையும், செயல்களையும் பார்த்து, அதை பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள், தங்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளையும், தனித்தன்மைகளையும் அறிந்து கொள்வதில்லை. எனவேதான், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம், “எப்போதும் நீ, நீயாகவே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை இன்னும் விவரமாக நீ தெரிந்து கொள்ள, அவர் உயிரோடு இருந்த போது, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய பேச்சை நான் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்….

3

“பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும்தான் நூற்றுக்கணக்கான அறிஞர்களை உருவாக்கும் ஊற்றாக விளங்குகிறது. உங்களில் இருந்துதான், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள், பல் துறை வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாகிறார்கள்., நல்ல அரசியல் தலைவர்களும் உருவாகிறார்கள்., நல்ல சான்றோர்களும் உருவாகுகிறார்கள்.

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்?- -தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பிய படி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? -ரைட் சகோதரர்கள்.

நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும் போது அலெக்சாண்டர் கிரகாம் பெல், நம் மனதில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான், ”ஒளிச்சிதறல்” (Scattering of Light), அது தான் சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான ((Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.

அஹிம்சா தர்மம் என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே…!

இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. “எந்த மாய வலையிலும் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன்” என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி, வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது, ”நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் “என்பது தான் அதன் அர்த்தம்.

நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு ப