மின்மினிச் செய்திகள்
on October 26, 2017 12:12 pm / no comments
மின்மினிச் செய்திகள்
அல்சர் என்ற குடல் புண் நோய்
பெரும்பாலான மக்கள், அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறார்கள். இதனை அல்சர் என்றும், குடல் புண் நோய் என்றும் கூறுகிறார்கள்.
அதிக காரமான உணவு, சரியான நேரத்தில் சாப்பிடாமை, புகை பிடித்தல், அதிக சூடாக சாப்பிடுதல், அல்லது திரவ உணவை அதிக சூடாக குடித்தல் போன்றவை காரணமாக இந்த நோய் உருவாகிறது. இதற்கு சரியான மருந்து, சரியான நேரத்தில், காரமில்லா உணவை சாப்பிடுவதுதான். மணத்தக்காளி கீரையை வாரத்துக்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை தவிருங்கள்.!!!.
நல்லமிளகின் மகிமை
“ 10 நல்ல மிளகுடன் உணவருந்தினால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்” என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பொருள், நல்லமிளகாகும். இது, இருமல், சளி போன்றவற்றையும் குறைக்கும்.
நல்ல பாம்பு நம்மை கடித்து விட்டால் கூட, 25 கிராம் நல்ல மிளகை வாயில் போட்டு மென்று தின்றால், பாம்பின் விஷம் முறியும்., அல்லது குறையும் என்பது முற்காலத்தில் இருந்து கடைபிடிக்கப் பட்டு வரும் முறையாகும்.!!!.
உலகை பயமுறுத்தும் உடல் பருமன் நோய்
உலகம் முழுவதும், ஏராளமான இளம் தலைமுறையினர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் உணவருந்துவது, முறையற்று இருப்பதேயாகும்.
இங்கிலாந்தில்தான் அதிக மக்கள் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். 5 முதல் 10 வயது சிறுவர்களில் 10 பேரில் ஒருவர் இந்த வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்த்தால், உடல் பருமன் நோயை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடல் பருமன் நோயால் அவதிப் படுவோர், நடை பயிற்சியை அதிகப் படுத்த வேண்டும் என்ற ஆலோசனையையும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.!!!.
நிறம் மாறாத ஆப்பிள்!
முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட “ஆர்டிக் ஆப்பிள்” விற்பனைக்கு வந்துள்ளது. இதை நறுக்கினால் பழுப்பு நிறமாக மாறாது. கனடாவைச் சேர்ந்த ஆகனாகன் நிறுவனம், இந்த ஆப்பிள்களை விளைவித்து விற்பனைக்கு வைத்திருக்கிறது.
சாதாரண ஆப்பிள்களை நறுக்கும்போது அதில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுவதால், “பாலிபினோல் ஆக்ஸிடேஸ்” என்ற வேதி மாற்றம் அடைந்து சில நிமிடங்களில் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. ஆனால் ஆர்டிக் ஆப்பிள்களை நறுக்கி ஒரு நாள் ஆனாலும் பழுப்பு நிறமாக மாறுவதில்லை.
“ஆப்பிள் துண்டுகள் நிறம் மாறினால், அதைக் குப்பையில் கொட்டிவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க நானும் என் மனைவி லூயிசாவும் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தோம். 2003 ம் ஆண்டிலேயே நிறம் மாறாத ஆப்பிள்களை விளைவித்துவிட்டோம். ஆனால் அதைப் பரிசோதனை செய்து, கேடு விளைவிக்காத உணவுப் பொருள் என்று சான்றிதழ் பெற இத்தனை ஆண்டுகளாகிவிட்டன” என்கிறார், ஆகனாகன் நிறுவனத்தின் தலைவர் நீல் கார்ட்டர்.!!!.
This post has been viewed 80 times
சமீபத்தில்
-
“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”
/
-
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது
/
-
ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி
/
-
தமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”
/
-
நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்
/
நேயர் கருத்துக்கள்