பள்ளிக்கு சென்ற மாணவி கடத்தல்

 

புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை…

பரவிவரும் வெடிகுண்டு கலாசாரத்தால் பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரியில் 3 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

jaffna-1

புதுச்சேரி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஜெரால்டு, சதீஷ் மற்றும் ஞானசேகர் ஆகியோர் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட 3 பேரில் 2 பேர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் சமீபகாலமாக பரவிவரும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். .

பள்ளிக்கு சென்ற மாணவி கடத்தல்:

போலீஸ் மீட்கா விட்டால், குடும்பத்துடன்
தற்கொலை செய்வோம் என மிரட்டல்

திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு சென்ற மாணவியை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையில், மகளை மீட்டுத்தராவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

1457500879-7439

போளுர் அருகே உள்ள பெலாசூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலையின் மகள் ராஜேஸ்வரி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற ராஜேஸ்வரி வீட்டிற்கு வராததால், அதிர்ச்சி அடைந்த தந்தை ஏழுமலை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்துள்ளார். அப்போது “ உங்கள் மகள் பள்ளிக்கே வரவில்லை” என தலைமை ஆசிரியர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மகளைப் பற்றி தீவிரமாக விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் ராஜீ என்ற வாலிபர் , ராஜேஸ்வரியை கடத்தி சென்றதாக அறிந்ததை அடுத்து, போளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற போலீசார் “பெண் காணவில்லை” என வழக்கு பதிவு செய்துள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். மகள் காணாமல் பல நாட்கள் ஆகியும் மாணவியை போலீசார் மீட்டு தராததால் வேதனை அடைந்த பெற்றோர், “மகளை உடனடியாக போலீசார் மீட்டு தராவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்” என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.!!.

 
 
 
 

This post has been viewed 128 times