சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( ராஜேஷ், சென்னை):
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை 15 நாட்களில் ஒழித்து விடுவோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறி இருக்கிறாரே? முடியுமா?
கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது., முடியாது.!!!.

( ஜெய்குமார், மதுரை):
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக நிலை., கருணாநிதியின் உடல் நலத்தில் முன்னேற்றம்…திமுக-வின் நிலை… இனி என்னவாகும்?
ஆட்சியில் இருக்கும் வரை அதிமுக-வுக்கு பங்கம் இல்லை. கருணாநிதிக்கு பிறகும் திமுக-வுக்கு பங்கம் இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சி பீடம் யார் ஏறுவார்கள் என்பது மட்டுமே கேள்வி.!!!.

( தங்க ராஜ், கோவை):
தமிழக அரசியலில் சினிமா நடிகர்கள் குதிக்க இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அரசியல் என்பது ஒரு கடல். இந்த கடலில் யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். ஆனால் முத்தெடுக்கப்போவது யார் என்பது மக்கள் கையில்.!!!.

( சங்கேஸ்வரி, சென்னை):
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருமா?
ராமதாசுக்கும், அன்பு மணிக்கும் ஆசை நிறையவே உள்ளது. ஆனால், கட்சி வளர்ச்சி பாதையில் செல்ல வில்லையே., இப்படி நிலை இருக்கும் போது, ஆட்சி கட்டில் வெகு தூரத்திலேதான் இருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.!!!.

( துரைராசு, திருப்பத்தூர்):
தாஜ்மகாலை, சுற்றுலா துறை பட்டியலில் இருந்து உத்தர பிரதேச அரசு நீக்கியது ஏன்?
உலக அதிசயங்களில் தாஜ்மகாலை, உலக அறிஞர்கள் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், உ.பி. மாநில அரசோ, தனது சுற்றுலா துறை பட்டியலில் இருந்து நீக்கி, அதற்கு அரசியல் சாயம் பூச நினைக்கிறது. எத்தனை சாயம் பூசினாலும் உண்மையை மறைத்து விட முடியாது.!!!.

( ஐஸ்வரியா, செங்கை):
சமீபத்தில் இந்திய- சீனா எல்லைக்கு சென்ற இந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அங்கு சீன எல்லைக்குள் நின்ற சீன வீரர்களுக்கு “வணக்கம் “ கூறி இருக்கிறாரே? சரியா?
ராணுவ ரீதியாக ஏற்புடையது அல்ல என்றாலும், அரசியல் ரீதியாக இதுவெல்லாம் ஒரு சுமூகமான நடைமுறை என்றே எடுத்துக் கொள்ளலாம்.!!!.

( செல்வம், சென்னை):
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்லப்பிள்ளையா? துணை முதல்வர் பன்னீர் செல்லப்பிள்ளையா?
இருவருமே மோடிக்கு செல்லப்பிள்ளைகள் அல்ல. இருவருமே அரசியல் சதுரங்கத்தில் விளையாடப்படும் பகடைக்காய்கள்..!!!.

( ராகுல், வந்தவாசி):

திமுக மீது அதிமுக-வும் , அதிமுக மீது திமுக-வும் வேறுபாட்டை காட்டுவது ஒன்றும் அதிசயமான நிகழ்வு அல்ல.!!!.

 
 
 
 

This post has been viewed 93 times