மது குடிக்கும் பழக்கம், மனைவியை கொலை செய்ய வைத்தது…!!!

 

“குடி குடியை கெடுக்கும்”

மது குடிக்கும் பழக்கம், மனைவியை கொலை செய்ய வைத்தது…!!!

மது குடிக்கும் பழக்கம், தனது மனைவியை கொலை செய்ய வைத்த சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் அருகேயுள்ள ஆவடியை அடுத்த கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர், நிஷா ராஜன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிஷா ராஜனுக்கு மோகனபிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகனப்பிரியா கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மோகனப்பிரியாவின் கணவர் நிஷா ராஜன் மீது சந்தேகம் எழுந்தது.

murder-640x400

இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குடி பழக்கத்திற்கு அடிமையான தன்னை குடியை நிறுத்த சொல்லி மனைவி மோகனப்பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நிஷா ராஜனை போலீசார் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இது போல மது குடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவர், தனது மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு, கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் ஏற்காடு அடிவாரம், சத்யா நகர் பகுதியில், ராஜா – ஜெயா தம்பதியினர் வசித்து வந்தனர். ராஜாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ராஜா, ஜெயாவை அடித்து கொன்று விட்டார்.

இது இரு கொலைகளுக்கும் காரணம் மதுவே என்பது உறுதியாகிறது. இப்படியாக ஏராளமான சம்பவங்கள், இந்தசமுதாயத்தில் நடந்து வருகின்றன.

அதே நேரத்தில் இந்த நவீன காலத்தில், சிலர் மது குடிப்பதை ஒரு பேஷனாக நினைக்கிறார்கள். ஆனால் என்ன தான் பேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.
ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் மது அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும்.

அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு மது பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி: இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

அதிக இரத்த அழுத்தம்: பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்
அதிக எடை: வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

இதய நோய்: இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

அனீமியா: அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

மன அழுத்தம்: மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
மூட்டு வலி: மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

காசு கொடுத்துப் பிரச்னைகளையும், நோய்களையும் வாங்க வேண்டுமா? என்பதை பாட்டிலைத் திறக்கும் முன்பு யோசிங்க மக்களே…!!!.

 
 
 
 

This post has been viewed 166 times