கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்து இறந்த பரிதாபம்…

 

கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்து இறந்த பரிதாபம்…

நெல்லையில் கந்துவட்டி பிரச்சனையால் மூவர் தீக்குளித்து இறந்த சம்பவத்தில், வட்டிக்கு பணம் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

201710240505243399_2-children-and-wife-killed-for-burnt-in-nellai-collector_MEDVPF

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்கள் ,அப்பகுதியில் உள்ள முத்துலட்சுமி என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். கடன் செலுத்தியும் மீண்டும் அவர் தொல்லைப்படுத்தியதாக கூறப்படுகின்றது. மேலும், கந்துவட்டிக்கு கடன் கொடுத்தவர் காவல்துறையினரை வைத்தும் இவர்களை மிரட்டியுள்ளார்.

familyfire_231017m-986

கந்துவட்டி கடன் தொல்லை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியினர், தனது இரு மகள்களுடன் திடீரென்று தீக்குளிப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தீக்குளித்த நான்கு பேரும் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 4 பேரில், தாய் மற்றும் 2 குழந்தைகள் ஆகிய மூருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் தந்தை இசக்கிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, நெல்லை காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய்ராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி, அவரது தந்தை காளியப்பர் மீது பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் இசக்கிமுத்துவிடம் விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கந்து வட்டியில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக செயல்படுவதே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு காரணம்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்திலேயே நடந்த மிக கொடுரமான சம்பவம் என்றும், 3 பேர் உயிரிழப்பிற்கு முழுக்காரணம் காவல்துறைதான் என்றும், சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும், என்றும் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனிதஉரிமை ஆணையத்திடம் முறையிடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்…!!!.

 
 
 
 

This post has been viewed 241 times