எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்ல வேண்டாம்”- கமல்ஹாசன் டுவீட்

 

எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்ல
வேண்டாம்”- கமல்ஹாசன் டுவீட்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியிருந்தனர்.

dc-Cover-anfegbfra3ee1mvanbf11fr9a2-20170812231512.Medi

 

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் “டுவிட்” செய்துள்ளார். அதில் சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது என்றும், அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

 
 
 
 

This post has been viewed 119 times