தமிழக அரசு தார் வாங்கியதில் ரூ.800 கோடிக்கு ஊழல்

 

தமிழக அரசு தார் வாங்கியதில்
ரூ.800 கோடிக்கு ஊழல்

சாலை பணிகளுக்காக, தமிழக அரசு தார் வாங்கியதில் ரூ.800 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Z560-750x506

2014–ம் ஆண்டு, தமிழகத்தில் சாலை அமைக்கும் பணியில் தார் கொள்முதல் செய்ததில், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுசேர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 800 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சமூக ஆர்வலர் ஜி.பாலாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் தொடர்பாக லஞ்சம் ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்…!!!.

 

 
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 

This post has been viewed 54 times