இரட்டை இலை சின்னம் யாருக்கு?

 

இரட்டை இலை சின்னம் யாருக்கு?

தேர்தல் கமிஷன் மீண்டும் விசாரணை

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

lea

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந் தேதி நடைபெற்ற விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு வாதிட்டது. மேலும் ஓ.பி.எஸ். அணியினர் போலி பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும் தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது.

அதே நேரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்போ, அ.தி.மு.க-வில் உறுப்பினராக இல்லாதவர், தினகரன். அவரால் அ.தி.மு.க-வுக்கோ, அ.தி.மு.க-வின் சின்னத்துக்கோ உரிமை கோர முடியாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக் 23–ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதன் படி 23- ம் தேதி மீண்டும் விசாரணை நடந்தது.

அப்போது, எடப்பாடி- பன்னீர் ஒருங்கிணைந்த அணி சார்பிலும், டி.டி.வி தினகரன் அணி சார்பிலும், சசிகலா தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு பற்றி வாதம் புரிந்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்த 4–வது கட்ட விசாரணையை, அக். 30–ம் தேதிக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தள்ளி வைத்தனர்.!!!.

 
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 

This post has been viewed 711 times