தனியார் நிறுவனங்களின் பாலை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில் சோதனை செய்ய வேண்டும்

 

தனியார் நிறுவனங்களின் பாலை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில் சோதனை செய்ய வேண்டும்

தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், “தனியார் பால் நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில், தங்கள் பாலை சோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ab08

தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், தனியார் பால் நிறுவனங்கள் விற்கும் பால், மனிதர்கள் உட்கொள்ள தகுதியானது அல்ல எனவும், கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும், 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் சிவில் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது பால் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் பால் நிறுவனங்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அமைச்சர் செயல்படுவதாகவும், பாலின் தரம் குறைந்ததற்கான ஆதாரம் அவரிடம் இல்லை எனவும் வாதிட்டனர்.

இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சர் எந்த ஓரு தனியார் பால் நிறுவனங்களின் பெயரையும் குறிப்பிட்டு பேட்டியளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து அக். 20–ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது நீதிபதிகள், “ அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில், 3 தனியார் பால் நிறுவனங்களும், தங்கள் பாலை சோதிக்க வேண்டும்., 3 மாதங்களுக்குள் இதன் முடிவை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணை முடியும் வரை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் பற்றி பேச தடை நீடிக்கிறது” என்று ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருக்கிறார்.!!!.

 
 
 
 

This post has been viewed 102 times