நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்

 

நடிகர் கமல்ஹாசன் மீது  போலீசில் புகார்

நிலவேம்பு கஷாயம் குறித்து அன்மையில் பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில், நிலவேம்பு கசாயத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு கஷாயம் குறித்து, முறையான மருத்துவ அறிக்கை வரும் வரை அதை, டெங்கு காய்ச்சலுக்காக மக்களுக்கு தனது தொண்டர்கள் வழங்க வேண்டாம் என தனது “டிவிட்டர்”பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

kamal-hassan1q-29-1461934193

 

இதனால் நிலவேம்பு கஷாயம் குறித்து மக்களிடையே நேர்மறையான எண்ணங்கள் தோன்றின. கமலஹாசனின் கருத்துக்கு சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் நடிகர் கமல்ஹாசன் மீது புகார் அளித்துள்ளார். அதில், நிலவேம்பு கஷாயம் தொடர்பாக நடிகர் கமல் தவறான தகவல்களை பரப்புவதாகவும், தமிழக அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் இவ்வாறு கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடிகர் கமல் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,”சர்ச்சையாக இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே ட்வீட்டில் பதிவிட்டேன்” என்று கமல் விளக்கம் அளித்துள்ளார்.

“நிலவேம்புக் கஷாயத்தை விநியோகிக்க வேண்டாம் என்று தனது நற்பணி மன்றத்தினரை மட்டுமே கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நிலவேம்புக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியை பரப்பவது எந்த விதத்திலும் நியாயமில்லை” என்று குறிப்பிட்டுள்ள நடிகர் கமல், சர்ச்சையாக இருக்கும் மருந்தை ஆர்வக் கோளாறில் அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே ட்வீட்டில் பதிவிட்டிருந்ததாக விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை விநியோகிப்பதையும், அதனை குடிப்பதையும் தான் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.!!!.