தமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”

 

தமிழகம் முழுவதும் 180 நாட்கள்
“ எழுச்சி யாத்திரை ”

தமிழகம் முழுவதும் 180 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான முடிவு, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

stalin

தமிழகம் முழுவதும் ஏற்கனவே “நமக்கு நாமே” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போலவே, மீண்டும் ஒரு சுற்றுப்பயணத்தை “எழுச்சி யாத்திரை” என்ற பெயரில் மேற்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 60 மாவட்டங்களில் தலா 3 நாட்கள் என 180 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரை முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், டெங்கு தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய திமுக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகத்தில் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில உரிமைகளை தாரை வார்க்கும் குதிரை பேர அதிமுக ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும், அதிமுக ஊழல் அமைச்சர்கள் கிரிமினல் ஊழலில் இருந்து தப்ப முடியாது என்றும், திமுகவினர் வாக்காளர் பட்டியலை சீரமைக்க வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமக்கு நாமே பயணம் போல் “எழுச்சி பயணம்” நவம்பர் 7-ம் தேதி தொடங்கும். டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும். அதிமுக ஆட்சியின் குறைகளை மக்களிடம் விளக்கவே இந்த பயணம் நடைபெற இருக்கிறது” என்று குறிப்பிட்டார்!!!.

 
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 

This post has been viewed 82 times