தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது

 

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது

“தமிழகத்தில் வலுவான முறையில் காலூன்ற பாரதீய ஜனதா கட்சி, பலருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கிறது. விஜய், ரஜினி, கமல் போன்றவர்களை பயன்படுத்த இது போன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப் படுகிறது”என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் சத்தியம் மின்னிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

maxresdefault (3)

“மெர்சல்” திரைபடம் பல்வேறு அரசியல் நிலைகளுக்கு உள்பட்டுள்ள நிலையில், இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், “ நடிகர்கள் விஜய், ரஜினி ,கமல் யார் அரசியலுக்கு வந்தாலும் சேவை மனப்பான்மையுடனும், சமூக அக்கறையுடனும் செயல் பட வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,” நான் செல்லிதான் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம் இல்லை. விஜய் போன்றவர்கள் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருவது என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது. விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்” என்றும் கூறினார். பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் வலுவான முறையில் காலூன்ற பார்க்கிறது என்றும் அதற்கு விஜய், ரஜினி, கமல் போன்றவர்களை பயன்படுத்த இது போன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் சந்திர சேகர் தெரிவித்தார்.

பொது நல கருத்தை தெரிவிக்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்றும் இதனை அரசியலாக பார்க்க கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், விஜய் நடித்த மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அக். 27- ம் தேதி நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வரிபிடித்தம் தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.51 லட்சம் செலுத்திய ஆவணங்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவன கணக்கு புத்தங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்!!!.

 
 
 
 

This post has been viewed 830 times