“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”

 

“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக
செயல்பட தடை விதிக்க வேண்டும்”

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு

“ஓ.பன்னீர் செல்வம்., மா.பா. பாண்டியன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. பிச்சாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

3601_paneerselvam (2)

ஜெயலலிதா மரணத்துக்கு பின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன், ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்தது. அதற்கு முன், சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபித்தார். அப்போது, அதிமுக கொறடாவின் உத்தரவையும் மீறி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, பன்னீர் செல்வம் அணியினர் வாக்களித்தனர். என்றாலும், எடப்பாடி தனது மெஜாரிட்டியை நிரூபித்தார்.
இதன் பின் பன்னீர் செல்வம் அணியினர், எடப்பாடி அணியுடன் இணைந்தனர். இதனை தொடர்ந்து, பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும், மா.பா பாண்டியனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், திமுக-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “, கடந்த பிப்ரவரி 18 ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர் செல்வம், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான முருகுமாறன், தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி..தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். எனவே கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அரசியல் அமைப்பு சட்ட விதி பத்தின் படி ஓ.பி.எஸ் மற்றும் மாபா.பாண்டியராஜன் எம்.எல்.ஏ என்ற தகுதியை இழந்து விட்டனர்.. அப்படி இருக்கும்போது, ஓ.பி.எஸ். துணைமுதல்வர் பதவியும், பாண்டியராஜன் அமைச்சர் பதவியும் வகிப்பது சட்டவிரோதமானது.

கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களிக்கும்போதே அவர்கள் தகுதியிழந்து விடுவதால், சபாநாயகர் தனியாக ஒரு தகுதியிழப்பு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.. மேலும் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத இருவரும், எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் தற்போது அமைச்சர் பதவி வகிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தன்னிலை விளக்கமளிக்க இருவருக்கும் உத்தரவிட வேண்டும் .

மேலும் இந்த சட்டவிரோதமான செயலை தடுக்க நீதிமன்றம் தலையிட்டு, அவர்கள் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டும்” என இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளனர்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 710 times