துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி நவ.7-ல் அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததால் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேரும், 3 தனியார் நிறுவனங்களின் மீது-ம் கடந்த 2011 -ம் ஆண்டின் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. 2GSCAM_sl_22_10_2011 கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி, அக்டோபர் 25 -ம் தேதி வெளியிடப்படும் என்று சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அக். 25- -ம் தேதி, நீதிமன்றத்தில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். இதனைத்தொடர்ந்து, தீர்ப்பு தேதியை அறிவிப்பது, நவ. 7 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, நீதிபதி அறிவித்தார்.!!!..

நவ. 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் போராட்டம்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய பாஜக அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8–ம் தேதி அறிவித்தது. இதையடுத்து புதிய 500 ரூபாய் நோட்டும், 2000 ரூபாய் நோட்டும் அறிவிக்கப்பட்டு, பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளிலும், ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. stalin (2)   இதன்மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டில் மக்கள் சிக்கி தவித்தனர். அப்போது, தமிழகத்தில் சேகர் ரெட்டி உள்பட பலரது வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அறிவித்த பிரதமர் மோடி, வங்கி பண பரிமாற்றத்தில், டிஜிட்டல் முறையையும் கையில் எடுத்தார். இந்நிலையில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் கூட்டாக முடிவு செய்து அறிவித்துள்ளன. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நவம்பர் 8 -ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கிடையில் நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.!!!.

மதுரையில், எய்ம்ஸ் அமைய வாய்ப்பு: இல. கணேசன் கணிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் அமைய அதிக வாய்ப்பிருப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். maxresdefault (1) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் பரிந்துரைகளின்படியே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ,மத்திய அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசன் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டிக் கொள்வதற்காகவே, நிலவேம்பு குடிநீர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக இல. கணேசன் விமர்சித்தார்.!!!..

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட்வைக்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“ தமிழ்நாட்டில் சாலைகள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்தில் பாதிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. cut_outs இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரி, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக் ஷா குமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து, “உயிருடன் இருப்பவர்களுக்கு கட்அவுட்,. பேனர்களை பொது இடங்களில் வைக்கக் கூடாது., அவர்களின் புகைப்படங்களும், பேனர்களில் இடம் பெறக்கூடாது.பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி அளித்தாலும், அதில் இந்த உத்தரவை அமல் படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது. இது தொடர்பான 1959- ம் ஆண்டு சட்டத்தை திருத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்…!!!.

மெர்சல் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் ஜி.எஸ்.டி, மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

mersal_1

இதனால், பா.ஜ.க-வுக்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் , “மெர்சல்” படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது “ட்விட்டர்” பக்கத்தில், மிகவும் முக்கியமான பிரச்சனையை “மெர்சல்” படம் அலசியுள்ளது; மெர்சல் படக்குழுவுக்கு எனது பாராட்டுகள்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அதே நேரத்தில், “கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும்”என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில் எவ்வாறு வாழ்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.!!!.

 
 
 
 

This post has been viewed 131 times