விமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே அதிர வைத்த ஈழத் தமிழன்

 

விமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே அதிர வைத்த ஈழத் தமிழன்

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டி தான் வருவேன். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? என சண்டைபோட்டு அனுமதி வாங்கி, வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.

1888193

இவர் “அகரன்” என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ் வார்த்தைகளை தவிர்த்து பிறமொழி சொற்களை பயன்படுத்த விரும்பாத ஒரே தமிழன். ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன். இவரை கர்வமாக சொல்லலாம்,”வேட்டி கட்டிய தமிழன்” என்று. இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகிறார்.

1892030

தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், ‘தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு–பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்’-ஐ உருவாக்கியுள்ளேன்.இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும். இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும்.

eN2Ohsitlarge_1888185-442-1

ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில், நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிக அதிக திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார்.!!!.

மனித முகம் கொண்ட மிருக குட்டி : நடந்தது என்ன ?

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிருந்த நிலையில் அது பற்றி உண்மையை மலேசிய போலீசார் வெளியிட்டனர்.
பிறந்த குழந்தை போன்ற தோலுடன் தலையில் கறுப்பு நிற முடிகளுடன் விலங்கை போன்ற முக அமைப்பு கொண்ட புகைப்படம் பேஸ் புக்-கில் வெளியிடப்பட்டு அது மலேசியாவின் பகாங் பகுதியில் இருக்கும் மிருக குட்டி என தகவல்கள் வெளியாகின.

456A4B4D00000578-5000548-image-a-28_1508498719757-300x188

இந்நிலையில் இது போலியான ஒன்று என மலேசிய போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். விலங்கு முக அமைப்பு கொண்ட கூர்மையான பற்கள் உடைய “சிலிக்கான்” பொம்மை இது என தெரிவித்துள்ளனர்.!!!.

தண்ணீரை வீணடித்த இளைஞரை குண்டு வீசிப் பிடித்த போலீசார்;ஜெர்மனியில் சம்பவம்

ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த போலீசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.

sfit_fitwater1009_ci_1-770x470-670x409

வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு, தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது.

அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது மிக மிக அதிகம் என்பதால் போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், போலீசார் மீது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வீசியுள்ளார். இதில் 3 போலீசாருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த வீட்டுக்குள் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்து, அந்த இளைஞரைப் பிடித்துள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட போது, வீட்டின் சமையலறை, குளியலறை, கழிவறை அனைத்திலுமுள்ள குழாய்கள் திறந்த நிலையில், தண்ணீர் கொட்டியபடியே இருந்துள்ளன.

அந்த இளைஞர் வருடம் முழுவதுமே தண்ணீரை இப்படித் திறந்து விட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞருக்கு மன நல சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த போலீசார், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.!!!.

கால் வலிக்கக் காக்க வைக்கும் டீ!

சீனாவில் ஒரு கோப்பை தேநீருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் கூட வரிசையில் காத்திருக்கிறார்கள்! சாதாரண ஐஸ் டீயின் மீது சீஸைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘ஹே டீ’. சீனா முழுவதுமே ஹே டீ சுவையில் மக்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். தேநீர் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாத 21 வயது இளைஞர்தான் இந்த சீஸ் டீயை உருவாக்கியவர்! சில மாதங்களுக்கு முன்பு வரை ஜியாங்மென் பகுதியிலுள்ள சிறிய தெருவில், ஓர் ஆள் நிற்கும் அளவுக்கான கடையில்தான் இந்த சீஸ் டீ விற்பனை நடந்து கொண்டிருந்தது.

20chskotea

இன்று குவாங்டோங் மாகாணத்தில் மட்டுமே 50 கிளைகள் இருக்கின்றன! ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 2 மணி நேரம் ஒரு கோப்பை தேநீருக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் 5 மணி நேரம் கூட பொறுமையுடன் காத்திருந்து, தேநீரைப் பருகுகிறார்கள். “கோங் சா என்ற தேநீரைப் பார்த்துதான் நான் சீஸ் டீயை உருவாக்கினேன். கோங் சா தேநீரில் க்ரீம் வைத்துக் கொடுப்பார்கள். சில காலம் இது பிரபலமாக இருந்தது. இன்று என்னுடைய சீஸ் டீ மக்களின் விருப்பமாக மாறிவிட்டது. இதைப் பருகியவர்கள் நல்லவிதமான கருத்துகளைப் பரப்பிவிட்டனர்.ஒரு மணி நேரத்தில் 360 கோப்பைகளை வழங்குகிறோம்.ரூபாய் முதல் 275 ரூபாய் வரை பல சுவைகளில் விற்பனை செய்துவருகிறோம்” என்கிறார் கடை அதிபர் யுன்சென்நை.!!!.

 
 
 
 

This post has been viewed 525 times