சினிமா செய்திகள்

 

2.0 பட ஆடியோ
வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமாவில் “மெர்சல்” பட ரிலீசை தொடர்ந்து பிரம்மாண்டமாக நடக்க போகும் ஒரு நிகழ்ச்சி ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டு விழா. அக்டோபர் 26–ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்காதவாறு மிகவும் அசத்தலாக நடக்க இருக்கிறது.துபாயில் புர்ஜ் பார்க்கில் நடக்கும் முதல் ஆடியோ வெளியீட்டு விழா, துபாய் அரசின் அனுமதியோடு நடக்கிறது.

388244-akshay-kumar-amy-jackson-a-r-rahman-and-superstar-rajinikantha.jpg

125 சிம்பொனி இசைக்கலைஞர்களுடன் ஏ.ஆர். ரகுமான் நேரலை.போஸ்கோ”நடன குழுவினர் ஷங்கர், ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரகுமானுக்காக ஸ்பெஷல் நடனம் ஆட இருக்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்பவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படுகிறது.2 கோடி மதிப்பில் துபாய் மால்களில் லிணிஞி ஸ்கிரீன் வைக்கப்பட இருக்கிறது. துபாய் அரசர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது..

பிரபாஸுக்கு அனுஷ்கா கொடுத்த
பிறந்தநாள் சர்ப்ரைஸ் கிப்ட்

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ்- அனுஷ்கா பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. இருவரும் காதலிப்பதாக சில வருடங்களாகவே “கிசுகிசு” உள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பிரபாஸ் அதை உடனடியாக மறுத்தார். எங்களுக்கு நடுவில் நட்பு மட்டுமே என்று விளக்கமளித்தார்.

DD-C-OTU0AAUZlr (2)

பிரபாஸ் கடந்த திங்கட்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அன்று அவருக்கு அனுஷ்கா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விலையுர்ந்த டிசைனர் வாட்ச்சை பிரபாஸுக்கு அனுஷ்கா பரிசளித்துள்ளாராம்..

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ்- அனுஷ்கா பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. இருவரும் காதலிப்பதாக சில வருடங்களாகவே “கிசுகிசு” உள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பிரபாஸ் அதை உடனடியாக மறுத்தார். எங்களுக்கு நடுவில் நட்பு மட்டுமே என்று விளக்கமளித்தார்.

பிரபாஸ் கடந்த திங்கட்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அன்று அவருக்கு அனுஷ்கா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விலையுர்ந்த டிசைனர் வாட்ச்சை பிரபாஸுக்கு அனுஷ்கா பரிசளித்துள்ளாராம்..

நடிகை அசினுக்கு முதல் குழந்தை பிறந்தது!

நடிகை அசின் சென்ற வருடம் ஒரு பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

imagen01-14_148491938991 (2)

இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. ” எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என ராகுல் சர்மா மீடியாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

ஷங்கருக்கு பிறகு அட்லீயே, மெர்சலை
புகழ்ந்த முன்னணி இயக்குனர்

“மெர்சல்” படம் திரைக்கு வந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் வருகிறது. அந்த வகையில் ஷங்கரின் உதவியாளராக இருந்து பல தரமான படங்களை கொடுத்தவர், வசந்தப்பாலன், இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் மெர்சல் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

PbVVo4-O (2)

இதில் குறிப்பாக “இயக்குநர் ஷங்கரின் வருகைக்கு பிறகு சமுதாயப்பார்வை கொண்ட படங்களை கமர்சியலாக வழங்கும் முறை தமிழ் சினிமாவில் மேலும் வலுப்பெற்றது.நிறைய இயக்குநர்கள் முயற்சித்தனர். இவருடைய பாணி படங்களை முயற்சித்து முழுவெற்றிக்கண்டவர், இயக்குனர் முருகதாஸ். ரமணா திரைப்படத்தில் முருகதாஸ் மிக திறன்பட சமுதாய கருத்துகளை கமர்சியலாக முன்வைத்தார்.அதில் வெற்றியும் கண்டார்.அதைத்தொடர்ந்து “துப்பாக்கி “மற்றும் “கத்தி” திரைப்படத்திலும் சமுதாயக் கருத்துகள் மூலமாக இயக்குநர் முருகதாஸ் பெரு வெற்றியை பெற்றார்.

இன்று அந்த வரிசையில் இயக்குநர் அட்லி “மெர்சல்” திரைப்படத்தின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துகளை கூறி கமர்சியல் வெற்றிக் கண்டுள்ளார்”’ என்று குறிப்பிட்டுள்ளார்..

 
 
 
 

This post has been viewed 137 times