குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சிறப்பும் எதை பொருத்து இருக்கிறது?

 

(குடும்ப வாழ்க்கை ஆரம்பித்து, சிறப்பித்து, மகிமைப்படுத்திய கணவன், மனைவியை பொருத்து இருக்கிறது, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியும், சிறப்பும்.)

மனைவியானவள் குடும்பம் மகிழ்ச்சியாக, சிறப்பாக இருக்க அவள் செய்ய வேண்டியவைகள்

family

கீழ்படிதல்

மறந்துவிடுதல்

நேசித்தல்

புரிந்துக்கொள்ளுதல்

கணவரை ஆதாயப்படுத்துதல்

கணவனானவன் குடும்பம் மகிழ்ச்சியாக, சிறப்பாக இருக்க அவர் செய்ய வேண்டியவைகள்

அன்பு கூறுதல்

கசந்துக் கொள்ளாதிருத்தல்

புரிந்து கொள்ளுதல்

கனப்படுத்துதல்

போஷித்து காப்பாற்றுதல்

கணவனும், மனைவியும் சேர்ந்து செய்யவேண்டியவைகள்

அன்பாயிருத்தல்

மன்னித்தல்

புரிந்துக்கொள்ளுதல்

சந்தேகப்படாதிருத்தல்

இறைவனை வழிபடுதல்

பிள்ளைகள் செய்யவேண்டியவைகள்

பெற்றோருக்கு கீழ்படிதல்

கனம்பண்ணுதல்

புரிந்துக்கொள்ளுதல்

உதவிச் செய்தல்

பெற்றோரை நேசித்தல்

படிப்பில் கவனம் செலுத்துதல்

மனைவிமார்களே,

உங்கள் புருஷருக்கு நீங்கள் கீழ்ப்படிய, கீழ்ப்படிய உங்கள் கணவரது அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும். அப்போது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் பெற்றோருடன் நீங்கள் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை தற்காலிகமானது. மரணம் வரை உங்கள் கணவரோடு வாழ்வது நிரந்தரமானது. எனவே கணவருடன் இணைந்து வாழும் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து கணவருடைய அன்பை சம்பாதித்துக்கொள் பெண்ணே!

கணவன்மார்களே!

கொடுத்தல் இல்லாமல் அன்பு இல்லை. திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் என் கணவர் எனக்கு ஒன்றும் வாங்கி தந்ததில்லை என்று சில மனைவிமார்கள் கூறுவதை கேட்டு இருக்கிறோம். உங்கள் அம்மாவிற்கு நீங்கள் நல்ல பிள்ளையாகவே இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நீங்கள் வாங்கி கொடுக்கும் அன்பான பொருளில் தான் இருக்கிறது. பொருளின் மதிப்பு பெரிதல்ல, ஒரு ரூபாய் பொருளானாலும் நீங்கள் அன்புடனும், பாசத்துடன் வாங்கிக் கொடுக்கும் பொருள் உங்கள் மனைவிக்கு உயர்ந்ததாகவும், மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கும்.

ஆகவே உங்கள் மனைவி மீது அன்பு கூர்ந்து, உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

பிள்ளைகளே!

நீங்கள் உங்கள் பெற்றோரை கனப்படுத்துங்கள் அவர்கள் கண்டிக்கும் பொழுதும், அவர்கள் உங்கள் தவறுகளை சுட்டி காட்டும் பொழுதும் உணர்ந்து செயல்ப்படுங்கள்.

எனவே பிள்ளைகளே அன்போடும், பண்போடும் உயர்ந்த எண்ணங்களோடும் அறிவு பூர்வமானவர்களாகவும் இருங்கள். எனவே பிள்ளைகளே ஒழுக்கத்துடனும், ஒற்றுமையுடனும்  வாழ்ந்து, பெற்றோருக்கு பெருமை சேருங்கள்.

மகிழ்ச்சியை தருவது கணவன்,

மகிழ்ச்சியுற செய்வது மனைவி,

மகிழ்ச்சியை கொடுப்பது குழந்தை..

மொத்தத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும் இடம் குடும்பம் !!

இதை புரிந்து மகிழ்ச்சியுடன் வாழ் பெண்ணே!!!

 
 
 
 

This post has been viewed 1,962 times