எந்த மனைவி உண்மையான மனைவி?

 

tumblr_static_screen_shot_2013-05-24_at_5.07.26_pm
ஒரு தொழில் அதிபருக்கு 4 மனைவிகள் இருந்தனர். 4–வது மனைவி மீது அவர் அதிக நேசமாக இருந்தார். 3–வது மனைவி மிகவும் அழகானவள்., அவளை தனது நண்பர்களுக்கு கூட அறிமுகம் செய்து வைக்க வில்லை. ஏனென்றால், அவரது நண்பர்கள் யாராவது அவளை அபகரித்துக்கொண்டு விடக்கூடாது என்பதுதான் காரணம்.

2–வது மனைவியின் வீட்டுக்கு அவன், தனக்கு பணப்பிரச்சினை ஏற்படும் போது மட்டும் செல்வார். அப்போது அவள் அவருக்கு பணப்பிரச்சினையை தீர்த்து வைத்து விடுவாள். முதல் மனைவியை அந்த தொழில் அதிபர் நேசிக்கவே இல்லை. ஆனால், அவளோ தனது கணவன் என்றாவது ஒரு நாள் திருந்தி விடுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
இந்த நிலையில் அந்த தொழில் அதிபர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்டார். அப்போது அந்த தொழில் அதிபர், தனது பாசத்துக்குரிய, நேசத்துக்குரிய 4–வது மனைவியை அழைத்து, “நான் இறக்கும் நிலையில் இருக்கிறேன்., நீயும் என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தஇளம் மங்கையோ, “முடியாது” என்று பதில் அளித்து விட்டு, திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விட்டாள்.

அதன் பின் இதே கேள்வியை, 3–வது மனைவியிடம் அந்த தொழில் அதிபர் கேட்டார். அவளோ, “நீங்கள் போய் பரலோகம் சேருங்கள்., இனி நான் இன்னொரு தொழில் அதிபருடன் குடும்பம் நடத்துவேன்” என்று கூறிவிட்டு, அமைதியாக சென்று விட்டாள். பின்னர் இதே கேள்வியை, அந்த தொழில் அதிபர் தனது 2-வது மனைவியிடம் கேட்டார். அவளோ, “ நான் வேண்டுமானால் கல்லறை வரை வருகிறேன்., ஷிளிஸிஸிசீ” என்று கூறிவிட்டாள். மனம் நொந்து போன தொழில் அதிபர், தனது முதல் மனைவியை அழைத்து, அதே கேள்வியை கேட்டார். வத்தல்-தொற்றலாக இருந்த முதல் மனைவி, தனது கணவரின் அருகே மெதுவாக நடந்து சென்றாள். ஏனென்றால், அவளை அவளது கணவர் சரியாக கவனித்துக்கொள்ளாததால், மெலிந்து போய் காணப்பட்டாள். “ நீங்கள் எங்கு சென்றாலும் நானும் உங்களுடன் வருவேன்., உங்களுடன் சாகவும் தயார்” என்றாள்.
முதல் மனைவியின் பதிலை கேட்டு, அந்த தொழில் அதிபர் மனம் வருந்தினார். “ நான் நன்றாக இருக்கும் போது, உன்னை சரியாக கவனிக்க தவறி விட்டேனே” என்று கூறி தேம்பித்தேம்பி அழுதார். அப்படியே படுக்கையில் சாய்ந்து மரித்தும் போனார்.

இந்த சம்பவத்தில் முதல் மனைவி, அந்த தொழில் அதிபரின் ஆன்மாவாக விளங்கினாள். 2–வது மனைவியின் பாத்திரம், குடும்பத்தினரையும், உறவினர்களையும் குறிக்கிறது. அதாவது அவர்கள் ,கல்லறை வரை மட்டுமே வருவார்கள். 3–வது மனைவியின் பாத்திரம், நமது சொத்து, சுகத்தை குறிக்கிறது. ஒருவர் இறந்ததும், அவரை விட்டு இவை இரண்டும், வேறு ஒருவர் அனுபவிக்க சென்று விடுகிறது. 4–வது மனைவியின் பாத்திரம், வெறும் உடல் சுகத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்போரை சுட்டிக்காட்டுகிறது.
இது தான் இன்றைய உலகமாக இருக்கிறது. பணம் மட்டும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை., உண்மையான அன்புதான் குடும்ப வாழ்க்கையை வளமடையச்செய்கிறது.!!!.

 
 
 
 

This post has been viewed 1,848 times