சிங்கமாக வாழுங்கள்

 

சிங்கமாக வாழுங்கள்

Lion_Png_03
இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு அமெரிக்கா போக ஆசை ஏற்பட்டது. ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்க அதிகாரி ஒருவரை பிடித்து, அமெரிக்காவிலுள்ள மிருக காட்சி சாலைக்கு சென்று விட்டது. அங்கு சென்றதும், அந்த சிங்கத்துக்கு தினமும் உணவாக ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டும் கொடுத்தார்கள். இதனால் பசியால் வாடிய அந்த சிங்கம் ,–“ நான் இந்தியாவில் காட்டுக்கே ராஜா. எனக்கு இந்தியாவில் தினமும் மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி எல்லாம் தாராளமாக கொடுப்பார்கள். அது போல நீங்களும் எனக்கு கொடுக்க வேண்டும்” என்று கேட்டது.
அதற்கு அந்த அமெரிக்க மிருககாட்சி சாலையில் இருந்த அதிகாரி கூறினார்,” நாங்கள் உனக்கு இறைச்சி கொடுக்க முடியாது. ஏனென்றால், நீ இங்கு வந்திருப்பது, “குரங்கு” விசாவில்தான். “குரங்கு “விசாவில் வந்தால், வாழைப்பழம்தான் கொடுப்போம்”என்றாரே பார்க்கலாம்!!
இளம் தலைமுறையே., “நம் நாட்டில் சிங்கமா வாழுங்கள்!! அயல்நாடு சென்று குரங்காக வாழைப்பழம் சாப்பிட வேண்டாம்!!!.

அன்பிற்கு அடங்கு., அறிவுக்கு அடிபணி

123756075880611086warszawianka_Mother_and_child_silhouette.svg.hi
+போதைக்கு அடிமையாகாதே., புதை குழியில் விழுந்திடுவாய்!
+மாதுவுக்கு அடிமையாகாதே., மதி கெட்டு அலைந்திடுவாய்!
+சூதுக்கு அடிமையாகாதே., சுற்றத்தை இழந்திடுவாய்!
+பணத்துக்கு அடிமையாகாதே., குணத்தை இழந்திடுவாய்!
+புகழ்ச்சிக்கு அடிமையாகாதே., மகிழ்ச்சியை இழந்திடுவாய்!
+தூண்டுதலுக்கு அடிமையாகாதே., தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!
+புலன்களுக்கு அடிமையாகாதே., பலன்களை இழந்திடுவாய்!
+கோபத்துக்கு அடிமையாகாதே., ஆபத்தில் விழுந்திடுவாய்!
+உணர்ச்சிக்கு அடிமையாகாதே., உன்னையே இழந்திடுவாய்!
+அன்பிற்கு அடங்கு., அறிவுக்கு அடிபணி., அத்தனையும் பெற்றிடுவாய்!!!

 
 
 
 

This post has been viewed 1,195 times